சிதம்பர ரகசியம்
by Unknown on Nov.22, 2009, under சிதம்பர ரகசியம்
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
-Thanks Sasi tharan
2 comments
-
Sivamjothi
26 June 2013 at 06:25கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது
ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.
இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.
தவம் செய்ய வேண்டும்!!!
தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!
தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!
நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.
இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.
திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.
உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.
அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.
லிங்க்ஐ படியுங்க.
http://tamil.vallalyaar.com/?page_id=80
blogs
sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in
video
ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg
About Me
Labels
- தாயுமானவர் (4)
- oral roberts (1)
- அட்சய பாத்திரம் (1)
- அன்பிற்கு மகத்துவம் அதிகம் (1)
- அன்பே சிவம் (1)
- உனக்காக பித்தனானேன் (1)
- உன் வலியை தீர்ப்பவன் இவனே (1)
- உன்னை நீயே திருத்திக்கொள் (1)
- உறுதியான வெற்றி (1)
- எது அர்த்தமுள்ள ஆன்மிகம் (1)
- எல்லாம் அவன் செயல் (1)
- தண்ணீர் நீ - நீர்க்குமிழி நான் (1)
- திருமந்திரம் (1)
- திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் (1)
- தொடக்கமும் நீ முடிவும் நீ (1)
- நிஜமான வெற்றி (1)
- நீயன்றி வேறு கதியில்லை (1)
- பகவத் கீதை (1)
- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி (1)
- பட்டினத்தார் (1)
- பத்திரகிரியார் (1)
- மனிதனும் தெய்வம் தான் (1)
- மனிதனே கடவுள் (1)
- மாணிக்கவாசகர் (1)
- மாயைகள் எனும் ஆசைகள் (1)
- வாழும் போதே சாகத்துணி (1)
2 May 2013 at 01:06
4) 15*60*24 மணித்துளிகள் பற்றிய இன்றைய மேற்கத்திய கணக்கீடுகள் அன்று இல்லை. .பின் எவ்வகையில் இந்த கணக்கீடு சாத்தியம். .
(15 என்பது நாம் கண்ணிமைக்கும் எண்ணிக்கை எனவும் கொள்ளலாமா. .?)
. .
7) 8) சதுர வடிவில் இருக்கும் பீடத்திற்கு நிலைத் தூண்கள் நான்கு தான் வரும். .
அதையும் தாண்டி வேண்டுமென்றாலும் நான்கின் பெருக்களில் மட்டுமே இருக்கும். .(7*4=28. .)
அதுதான் ஸ்திரம். .
எ.கா ஆயிரங்கால்,நூறுகால் மண்டபங்கள். .
9) சைவ கோவில்களில் விமான கலசங்கள் ஒற்றைப்படை என்களில்தான் இருக்கும். . அந்த கால கட்டட கலையில் கீழ் பீடத்தில் பரப்பளவு பெரியதாய் இருக்க மேற்கோபுரமும் அதற்கேற்றவாறு மாறுபடும். . அவ்வாறு மேற்கோபுர விட்டமும் நீளமும் மாறுபடும்போது கலசங்களின் எண்ணிக்கையும் மாறுபடலாமே. .! இருபுரமும் கற்கொம்புகள் வைக்கும் பொருட்டு நடுவில் வரும் MEDIAN & MODE ஒற்றைப் படையிலேயே அமையும் என்பது சாதாரண கணக்கு. .
. .
டிஸ்கி : தமிழனின் கட்டட கலையின் வியப்பு தீராமல் அதன் ஸ்திரதன்மையை ஏன் இப்படி இருக்கிறது,ஏன் இப்படி இருக்கக் கூடாது எனும் கேள்விகள் மூலம் தேடிக்கொண்டிருக்கிறேன். .மற்ற விஷயங்களுக்கு கேள்விகளை தேடிப்பிடிக்கிறேன். .!
. .
'பிரபந்தம்'. . பெயர் அருமை. .