Demo Blog

உன் வலியை தீர்ப்பவன் இவனே- மாணிக்கவாசகர்

by Unknown on Nov.22, 2009, under ,

தாமே தமக்குச் சுற்றமும் தாமே
தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் !
                                 -மாணிக்கவாசகர்

பொருள் :
உன் வலிகளை முற்றிலும் உணர்ந்து அதற்கு நிவாரணம் தருகிறவனும், உன் விதியை அறிந்து உனக்காகவே உன் கூடவே இறுதி வரை வரக்கூடியவனும் , உன் சுற்றமும், நட்புமாய் , உனக்கே உரியவன் ஒருவன் உலகில் இருக்கிறான்! அவன் தான் " நீ "!
0 comments more...

மனிதனும் தெய்வம் தான் - தாயுமானவர்

by Unknown on Nov.22, 2009, under ,

எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ
சிந்துருவே இன்பச் சிவமே பராபரமே
                                                                         - தாயுமானவர்
பொருள் :
"உயிர்கள் அனைத்தும் அரியும் சிவனுமே!" இறைவனின் படைப்பினாலான அத்துனை மனிதனையும் இறைவனின் வடிவமே என்று உணரத் தொடங்கியவனுக்கு வாழ்வொன்றும் கடினமில்லை!
0 comments more...

எது அர்த்தமுள்ள ஆன்மிகம்? - பத்திரகிரியார்

by Unknown on Nov.22, 2009, under ,

ஆதிமுதலாகி நின்ற அரிஎன்ற அட்சரத்தை
ஓதியறிந்து உள்ளே உணர்வதினி எக்காலம் ?
                                                                           - பத்திரகிரியார்
பெருமாளையும் , சிவனையும் உருகி வணங்குவதோடு முடிந்து விடுவதில்லை ஆன்மிகம்! மண்ணில் வாழும் மாந்தர்கள் யாவரும் கடவுளின் வடிவம் என்று அன்பு செய்யத் தொடங்கும் போது நம்மில் ஆன்மிகம் முழு உயிர் பெறுகிறது  !
0 comments more...

உறுதியான வெற்றி

by Unknown on Nov.22, 2009, under

    

               பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
              இருள்தீர எண்ணிச் செயல்
                                                                                                   -திருக்குறள்

 பொருள் :
"ஒவ்வொரு பெரிய வெற்றியின் தொடக்கமும் கண்டிப்பாக ஒரு சிறிய முயற்சியின் விளைவு  தான்!" என்னும் உண்மையை உணர்ந்தவனா நீ ? வருந்தாமல் முன்னேறு !  கண்டிப்பாக உன் வெற்றியும் நிச்சயிக்க பட்ட ஒன்றாகி  விட்டது !

0 comments more...

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

by Unknown on Nov.22, 2009, under

"என் கைகள்தாம் என் முதல் மேல்துணியாகும். எத்தனை கம்பளி போர்த்துக்கொன்டாலும் அதற்கு ஈடாகுமா!"
                                      - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

உணர்வதர்க்கோர் உள்ளுணர்வு :

பட்டு சட்டை பணக்காரனின் அடையாளம் !
"பத்து விரல் போதும்" (என் மானத்தை மறைக்க) என்று சொன்ன மகரிஷி மனிதனுக்கு அடையாளம் !
எல்லாம் இருப்பவன் செயற்கையாய் மகிழ்கிறான் 
ஒன்றும் இல்லாதவன் என்றென்றும் மகிழ்கிறான் !
"இல்லாமையில் தான் இருக்கிறது இனிமையான வாழ்க்கை "
என்பதற்கு ரமணர் ஓர் அற்புத எடுத்துக்காட்டு !
0 comments more...

நீயன்றி வேறு கதியில்லை

by Unknown on Nov.22, 2009, under

நிறையுடைய நெஞ்சின் இடையை போற்றி
நீங்காதுஎன் னுள்ளத் திருந்தாய் போற்றி .
                                                         -அப்பர்
பொருள் :
குறைகுடமாய் இருக்கிற என்னெஞ்சை எப்போழ்து நான் உன் நினைவிர்ற்கென அர்ப்பணித்தேனோ அப்போழ்தே நிறைந்துவிட்டேன் தேவே !
இனி உன்னையன்றி வேறேதும் தேவையில்லையே!
0 comments more...

உன்னை நீயே திருத்திக்கொள்

by Unknown on Nov.22, 2009, under

ஆங்காரம்  உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்
                                                                   -பத்திரகிரியார்
பொருள் :
கடவுள் இல்லை ! இருந்திருந்தால் என்னை இப்படி என்னை துன்பப்படுத்தி வேடிக்கை பார்ப்பானோ ? என்று வீண் பேச்சு பேசிக்கொண்டிருக்கும் நான் ! ஒரு போதும் உன்னை குறைசொல்வதை விடுத்து என்னை திருத்திக்கொள்ள முயன்றது கூட இல்லை !இனி 
என்னை நானே திருத்தி கொள்ளும் பக்குவத்தை எனக்குத் தந்தருள் பராபரமே !
0 comments more...

உனக்காக பித்தனானேன்

by Unknown on Nov.22, 2009, under

ஏத்தார் பிழைப்பேனோ எந்தையே நின்னருட்கே
பித்தனானேன் மெத்தவுனான் பேதை பராபரமே .
                                                                        -தாயுமானவர்
பொருள் :
கலியுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின்மேல் பித்துப் பிடித்தவராக
இருக்கையில் இறைவா - நான் உன் அருளுக்காய் 
பித்தன் ஆகிட வேண்டுகிறேன் !
0 comments more...

தண்ணீர் நீ - நீர்க்குமிழி நான்

by Unknown on Nov.22, 2009, under

நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடர்
கித்தனைதான் துன்பமுண்டோ அண்ணே பராபரமே.
                                                                            - தாயுமானவர் 
பொருள் :
என் தலைவிதி எழுதிய எம்பெருமானே !
நீ தண்ணீர் !
நான் அதில் வெறும் நீர்க்குமிழி !
நிலையில்லாத இந்த நீர்க்குமிழிக்கும் 
நீ இத்தனை துன்பத்தை ஏன் கொடுத்தாய்?
0 comments more...

வாழும் போதே சாகத்துணி

by Unknown on Nov.22, 2009, under

ஆவியொடு காய மழிந்தாலும் மேதியினில்
பாவிஎன்று நாமம் படையாதே - மேவியசீர்
வித்தார முங்கடம்பும் வெண்டாம் - மடநெஞ்சே
செத்தாரை போலத் திரி .
                                                            -பட்டினத்தார்


பொருள் :
 வாழும்போதே சாகிறவர்கள் யாரோ ( இலட்சியத்திற்காக , முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்கள் )அவரே செத்த பிறகும் வாழ்கிறவர்கள் ஆவர்  !
0 comments more...

அட்சய பாத்திரம்

by Unknown on Nov.22, 2009, under

எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்
அத்தனைபேர் உண்டாலும் அனுவுங் குறையாண்டி !
                                                                           - பட்டினத்தார்

எம்பெருமானே ! நீவிர் அல்ல அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்!
உன்னை சொந்தமாக்கி கொள்ள எவர் தான் விரும்ப மாட்டார் ??
0 comments more...

தொடக்கமும் நீ முடிவும் நீ

by Unknown on Nov.22, 2009, under

குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனை
பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம் ?
                                                    -பத்திரகிரியார்

பொருள் : 
மெய்செய்து விதிசெய்து உலக வாழ்வை எனக்கு படியளந்த பராபரமே !
நீயளித்த வாழ்வை நீங்கி உன்னில் நான் வந்து கலப்பது எப்போதெனத் தெரியலையே .!!
0 comments more...

மாயைகள் எனும் ஆசைகள்

by Unknown on Nov.22, 2009, under

இகமுழுதும் பொய்யெனவே
எயத்துனர்ந்தால் , ஆங்கே
மிகவளர் வந்தஅருள்
மெய்யே - அகநெகிழப்
பாரீர் ஒருசொற் படியே அனுபவத்தை
சேரீர் ; அதுவே திறம் .
                                           - தாயுமானவர்

பொருள் :
மாயைகள் எனும் ஆசைகள் நிறைந்த உலக வாழ்க்கை ஒரு பொய் மான் போன்றதாகும் !
அவ்வாசைகள் கடந்து உன்னை வந்து சேர  அருள் புரிவாயாக இறைவா!! 
0 comments more...

எல்லாம் அவன் செயல்

by Unknown on Nov.22, 2009, under ,

பார்க்கின் அண்டபிண்டப் பரப்பனைத்தும் நின்செயலே
யார்குஞ் செயலிலையே ஐயா பராபரமே.
                                                                         - தாயுமானவர்

 பொருள் :  
உலகின் ஒவ்வொரு நிகழ்வும் இறைவா உன் செயல் !
என் செயல் என்பது அன்பு செய்வது மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை! 
எல்லாம் அவன் செயல்
0 comments more...

மனிதனே கடவுள் - தாயுமானவர்

by Unknown on Nov.22, 2009, under ,

உண்டு உடுத்துப் பூண்டு இங்கு உலகத்தார் போல்திரியும்
தொண்டர்வினை யாட்டே சுகங்காண் பராபரமே !
                                                                                        - தாயுமானவர்
பொருள் :
கண்முன் தெரிகிரவனை கடவுளென எண்ணி சேவை செய்யும்
மனதை வளர்த்துக்கொள்! அப்போதே  நீயும் முழு மனிதனாய் ஆகிவிடுகிறாய்!
0 comments more...

அன்பே சிவம்

by Unknown on Nov.22, 2009, under ,

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆறும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆறும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
                                                                     - திருமந்திரம்
பொருள் : 
ஈசனும் இனிய பண்பாகிய அன்பும் ஒன்றென உணர் மனிதன நெஞ்சமே !
அன்பே கடவுள் ! அன்பே கேள்வி ! அன்பே பதில் ! அன்பே சிவம் !
0 comments more...
Prabhakaran Palanisamy. Powered by Blogger.

Looking for something?

Use the form below to search the site:

Still not finding what you're looking for? Drop a comment on a post or contact us so we can take care of it!