Demo Blog

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார்

by Unknown on Nov.22, 2009, under

மந்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் புரியாத தேவகி தன்வயிற்றில்
அத்த்ததின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே !
முகிழ் நகையீர் ! வந்து காணீரே!

பொருள் : 
மதம் கொண்ட யானைகளை சொந்தமாக வைத்திருக்கும் வாசுதேவரின் மனதில் எங்கெங்கும் நிறைந்திருப்பவள் தேவகி! அவளின் வயிற்றில் அஸ்த நட்சத்திரத்திற்கு பத்தாம் நாளான ரோகினி நாளில் கண்ணன் பிறந்தான் ..!! கண்ணனை முத்தமிடும்  கோகுல பெண்களே...!! காணீர்.!! என் அப்பன் கண்ணனின் அழகினை காணீர்..!!
0 comments more...

நிஜமான வெற்றி - தாயுமானவர்

by Unknown on Nov.22, 2009, under ,

"நான் தவறே செய்யாதவன்" என்று 
யார் ஒருவனும் கூறிக்கொள்ள முடியாது ..!

தவறு திருத்தத்திற்கு  உரியது.,

திருத்தப்படும் போது 
பிழைகள் அனைத்து சரியாகி விடும்! 

தவறு செய்து விட்டதாக 
பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் 
தோல்வி என்பதே கிடையாது..!
அவமானமும் கிடையாது! 

அதுதான் நிஜமான வெற்றி 
என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!


0 comments more...

பகவத் கீதை

by Unknown on Nov.22, 2009, under

யோக: கர்மஸூ கௌசலம் !
        योग: कर्मसु कौसलम
--------------------------------------------------------------------------------
பொருள் : செய்வதை செம்மையாக செய்வதே யோகம்
--------------------------------------------------------------------------------
விளக்கம் : செயல்களில் இது சிறிது இது பெரிது என்ற எண்ணம் மனித சிந்தையை விட்டு அகன்று, "செய்கிற செயல்கள் யாவும் சிறப்பே" என்று என்னும் நிலை வரின்., கருணா மூர்த்தியே அதுவே நான் உன்னை உணர்ந்து  உன்னிடம் வந்து சேர்கிற நொடி ஆகும்!

                                              பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்  அர்ஜூனர்  சொன்னது 
1 comments more...

உடலுக்காய் வாழும் உயிர்கள் - பட்டினத்தார்

by Unknown on Nov.22, 2009, under

அநித்தியத்தை நித்தியமென்று
ஆதரவாய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே
தனைமரக்கேன் என்குதே
- பட்டினத்தார்

பொருள் :

உயிரை  விட பெரிய விடயமாய் உடலை பேணுகிறான் மனிதன் !
பெண்ணிடம் ஆணும் ஆணிடம் பெண்ணும் என்றைக்கு உடற் பற்றற்று 
உயிரில் உறைந்திருக்கும் அன்பிற்காய் மட்டும் வாழ்கிறார்களோ
அன்று கண்டிப்பாய் உலகில் பாவங்கள் குறைந்திருக்கும் ! 
 
2 comments more...
Prabhakaran Palanisamy. Powered by Blogger.

Looking for something?

Use the form below to search the site:

Still not finding what you're looking for? Drop a comment on a post or contact us so we can take care of it!